ஆபாச வீடியோ அனுப்பி பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது

பெண்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-18 20:36 GMT
பெங்களூரு: பெங்களூரு வடகிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் அவரது செல்போனுக்கு அடிக்கடி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்திருந்தார். 

இதுபற்றி வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை கைது செய்ய தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஹாசன் மாவட்டம் அரக்கல்கோடுவை சேர்ந்த ஹரீஷ் என்பதும், கனரக வாகனங்களை ஓட்டும் டிரைவர் என்பதும் தெரியவந்தது. இவர், ஏராளமான சிம் கார்டுகளை வாங்கி வைத்திருந்தார். 

அந்த சிம் கார்டுகள் மூலமாக முகநூலில் இருந்து பெண்களின் செல்போன் எண்ணை எடுத்து கொள்வார். பின்னர் அந்த பெண்களின் வாட்ஸ்-அப்புக்கு ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அத்துடன் அவர்களுடன் செல்போனில் ஆபாசமாகவும் ஹரீஷ் பேசி தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்