மாவட்டம் முழுவதும் மேலும் 15 பேருக்கு கொரோனா

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.;

Update: 2022-02-18 20:33 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொற்று பாதிப்பு ஏற்படுவோரை கண்டறிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் உள்பட 210 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உரிய கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 41 பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 36,100 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 283 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்