கடைக்குள் புகுந்த மரநாய் பிடிபட்டது

கடையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே கடைக்குள் புகுந்த மரநாய் பிடிபட்டது.;

Update:2022-02-19 01:49 IST
கடையம்:
கடையம் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையை நேற்று காலையில் ஊழியர்கள் திறந்தனர். அப்போது கடையின் ஷட்டர் மீது பதுங்கி இருந்த மரநாய் திடீரென்று அந்த கடைக்குள் புகுந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இதுகுறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே வனவர் முருகசாமி தலைமையில், வன காப்பாளர் காட்வின், வேட்டை தடுப்பு காவலர் வேல்சாமி ஆகியோர் விரைந்து சென்று, கடைக்குள் பதுங்கியிருந்த மர நாயை பத்திரமாக மீட்டனர். அது சுமார் 2½ வயதுடைந்த பெண் மர நாய் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அதனை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்