தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-18 20:16 GMT
குண்டும், குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை-புதிய பஸ்நிலையம் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த சாலையால் தினமும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
நாகூர், கீழக்கரை.
ரேஷன்கடை தேவை
மதுரை மாவட்டம் செல்லூர் கீழகைலாசபுரம் 23-வது வார்டில் ரேஷன்கடை இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று அடுத்த ஊரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகின்றனர். பெண்கள் மற்றும் முதியோர்கள் இதனால் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் ரேஷன்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சந்தனகுமார், கீழகைலாசபுரம்.
பஸ் வசதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி-முதுகுளத்தூர் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகின்றது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படும் பஸ்சை தவறவிட்டால் பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை பராமரித்து பஸ்களை இயக்க உத்தரவிட வேண்டும்.
பழனி, தெற்கு காவனூர்.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாவட்டம் முனிச்சாலை, அப்பலோ மருத்துவமனை சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் இந்த சிக்னல் உள்ள பகுதியில் நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், விரகனூர்.
கால்நடைகள் தொல்லை
மதுரை மாவட்டம் தெற்குவெளிவீதியில் கால்நடைகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் இவை சுற்றித்திரிந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றது. இரவில் சிறு, சிறு விபத்துகள் நிகழ காரணமாக இவை சாலையில் படுத்து உறங்குகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை அப்புறப்படுத்தி கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
டேவிட், திடீர் நகர். 
சேதமடைந்த சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடைக்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது.   இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற வாகனங்கள் இந்த சாலையில் செல்ல மறுக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்துள்ள சாலைைய சீரமைக்க வேண்டும்.
பாலமுருகன், ஆர்.எஸ்.மங்கலம்.

மேலும் செய்திகள்