மதுபாட்டில்கள் பறிமுதல்

மது விற்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 47 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-02-18 20:00 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை போலீசார் பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் கீழ தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்த தாழையூத்து பகுதியை சேர்ந்த முப்பிடாதி (வயது 29) என்பவரை கைது செய்தனர். இதேபோல் வெள்ளக்கோவில் ரோட்டில் மது விற்று கொண்டிருந்ததாக மூளிகுளம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவரை கைது செய்தனர்.
பெருமாள்புரம் போலீசார், ஆரோக்கியபுரம் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (48) என்பவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்