ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலந்தங்குழி கிராமத்தை சேர்ந்த சீனிவாசனின் மகன் விஜயகுமார் (வயது 25). டிரைவர். இவர் வாரியங்காவல் கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.