இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லி கொண்டாநகரம் ஹமிதா கார்டனை சேர்ந்தவர் முத்துமாரியப்பன் மகள் செண்பகாதேவி (வயது 25). இவர் கோமதி நகர் அருகே வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த சுத்தமல்லி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த சுப்பையா மகன் விக்னேஷ் (25) என்பவர் செண்பகாதேவியை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செண்பகாதேவி சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் திரேஷா வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து விசாரித்து வருகிறார்.