பத்திரகிரியார் சிலையை உடைத்த முதியவர் கைது

திருவிடைமருதூர் அருகே பத்திரகிரியார் சிலையை உடைத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-18 19:32 GMT
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலின் மேற்கு கோபுரத்தின் கீழ் மண்டபத்தில் குகைக்கோவிலில் பத்ரகிரியார் சிலை 4½ அடி உயரத்தில் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று இந்த சிலையை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். 
இதுகுறித்து கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் திருவிடைமருதூர் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சிலையை உடைத்த பாபநாசம் அருந்ததியபுரம் அம்பலக்காரதெருவை சேர்ந்த மாரிமுத்து (வயது60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்