தேர்தல் விதிமீறல் குறித்து 30 புகார்கள்
தேர்தல் விதிமீறல் குறித்து 30 புகார்கள் அளிக்கப்பட்டன;
புதுக்கோட்டை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் தொலைபேசியில் 24 மணி நேரம் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டன. பொதுமக்கள் பலரும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். இதில் மொத்தம் 30 புகார்கள் வரை பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கவிதாராமு நிருபர்களிடம் கூறுகையில், தேர்தலில் விதிமீறல் தொடர்பாக இதுவரை மொத்தம் 20 லட்சத்து 43 ஆயிரத்து 665 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தபால் ஓட்டு படிவம் 1,898 வினியோகிக்கப்பட்டதில் 455 தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குப்பதிவு நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.