ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பார்வையற்ற பெண் புகார்
ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பார்வையற்ற பெண் புகார்;
திருச்சி, பிப்.19-
திருச்சி அல்லித்துறையை சேர்ந்த சுரேஷின் மனைவி சத்யபாமா. பார்வையற்றவர். இவர் நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் கிளீனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பலரிடம் கடன் வாங்கி அறுவை சிகிச்சை செய்தேன். கடனை அடைக்க முடியாததால் உறையூரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தரும்படி கேட்டேன். அவர் பீமநகரில் மருந்து கடை நடத்துபவரின் நிதி நிறுவனத்தில் கடன் ரூ.83 ஆயிரம் வாங்கித் தந்தார். அப்போது அந்த பணத்துக்கு வாரந்தோறும் வட்டி கொடுக்க வேண்டும். எனது கணவர், அவரது தம்பி மற்றும் மாமியார் பெயரில் கோப்பு கிராமத்தில் உள்ள 39.50 சென்ட் நிலத்தை மருந்து கடைக்காரரின் மகன் பெயருக்கு பவர் எழுதி தரவேண்டும் என கூறி, பல பேப்பர்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். இதுவரை ரூ.2 லட்சம் வரை கட்டியுள்ளேன். ஆனால் இதுவரை பவர் எழுதி வாங்கிய நகலை தரவில்லை. இதுபற்றி கேட்டபோது முழு பணத்தையும் கட்டினால் தான் தருவோம் என்றனர். மீதி பணத்தை தருவதாக கூறியபோது, தந்தையும், மகனும் ரூ.12 லட்சம் பாக்கி தரவேண்டும், இல்லையென்றால் இடத்தைதரமுடியாது என்று மிரட்டுகிறார்கள். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.