தக்கலையில் டெம்போவுடன் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலையில் டெம்போவுடன் 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-18 18:37 GMT
நாகா்கோவில், 
குமரி மாவட்ட உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையில் போலீசார் நேற்று தக்கலை பழைய பஸ் நிலையம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்றை நிறுத்துமாறுபோலீசார் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் டெம்போவை சற்று தூரத்துக்கு முன்பே நிறத்திவிட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவில் சோதனை போட்டனர்.
அப்போது அதில் சிறு, சிறு மூடைகளில் 2½ டன் ரேஷன் அாிசி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்நது டெம்போவுடன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்