வாணியம்பாடி அருேக அரசு பஸ்களை சிறை பிடித்து மலைக்கிராம மக்கள் போராட்டம்

வாணியம்பாடி அருேக அரசு பஸ்களை சிறை பிடித்து மலைக்கிராம மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அரசு பஸ்களில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-02-18 18:06 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருேக அரசு பஸ்களை சிறை பிடித்து மலைக்கிராம மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். அரசு பஸ்களில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

சாலை மறியல்

வாணியம்பாடி அருகே ஜவ்வாது மலையில் ஜமுனாமரத்தூர், காவலூர், சத்திரம், மலைரெட்டியூர், ஆர்.எம்.எஸ். புதூர் உள்பட 30-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஆலங்காயம் பள்ளிகளுக்கும், வாணியம்பாடியில் உள்ள கல்லூரிகளுக்கும் படிக்க வருகிறார்கள்.
காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளை அரசு பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஏற்றி செல்வதில்லை எனப் புகார் எழுந்து வருகிறது. 

குற்றச்சாட்டை முன்வைத்து ேநற்று காலை ஆலங்காயம்-ஜமுனாமரத்தூர் சாலையில் ஆர்.எம்.எஸ். புதூர் என்ற பகுதியில் மலைக் கிராம மக்களும், மாணவ-மாணவிகளும் ேசர்ந்து அந்த வழியாக அடுத்தடுத்து வந்த அரசு பஸ்களை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை அரசு பஸ்களில் ஏற்றி செல்ல ேவண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்காயம், காவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மலைக் கிராம மக்களுடனும், மாணவ-மாணவிகளுடனும் சமரச ேபச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். 

மேலும் மாணவ-மாணவிகளை உடனடியாக அரசு பஸ்களில் ஏற்றி பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மலைக்கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்