ஆம்பூர் அருகே வாய்ப்பேச முடியாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளி கைது

ஆம்பூர் அருகே வாய்ப்பேச முடியாத பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-18 18:06 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள பட்டுவாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது பெண். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பெருமாள் (வயது 46). கூலித் தொழிலாளி. இவர் சில தினங்களுக்கு முன்பு தனியாக வசிக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறி அழுதார். இதையடுத்து உறவினர்கள் மூலம் அந்த பெண் நேற்று முன்தினம் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்