முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சமயபுரம், பிப்.19 -
மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., தம்பி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்திநகர் 7-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 32). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி ஏரி பகுதியில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.. இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ராஜா (34), சுரேஷ் என்கிற பாண்டி (29), புல்லட் ராஜா என்கிற நளராஜா (41), (நளராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் தம்பி ஆவார்), அரவிந்தசாமி (19), ஷேக் அப்துல்லா (45), சதீஷ்குமாரின் தாய் அம்சவல்லி (63) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் விசாரணையில், அம்சவல்லி தனக்கு சொந்தமான இடத்தை ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை செய்ததாகவும், அதில் மூன்றில் ஒரு பங்குதொகையான, ரூ.37 லட்சத்தை மகன் சதீஷ்குமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது. இந்த பணத்தை அவர் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டு தொடர்ந்து பணம் கேட்டு தாய் அம்சவல்லியிடம் தொந்தரவு செய்தாராம்.
இதனால்ஆத்திரமடைந்தஅம்சவல்லிமேற்கண்டவர்களை வைத்து சதீஷ்குமாரை கொலை செய்ததுதெரியவந்தது. இந்நிலையில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோரது பரிந்துரையின்படி, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, புல்லட் ராஜா என்ற நளராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து உத்தரவின் நகலை சிறையிலிருக்கும் புல்லட் ராஜாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.