வாக்குப்பதிவுக்கான பொருட்களுடன் புறப்பட்ட வாகனங்களை கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

வாக்குப்பதிவுக்கான பொருட்களுடன் புறப்பட்ட வாகனங்களை கலெக்டர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.;

Update: 2022-02-18 18:04 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பொருட்களுடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்றிடும் வாகனங்களை மாவட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் வளர்மதி முன்னிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

அப்போது ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, தேர்தல் நடத்தும் அலுவலர் ஏகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்