சோளிங்கரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி
சோளிங்கரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி நடந்தது.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் இன்று (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இந்த நிலையில் சோளிங்கரில் நகராட்சி தேர்தலில் பணிபுரியும் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான இறுதிக்கட்ட பயிற்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி ஆணையர் பரந்தாமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பதற்றமான வாக்குச்சாவடிகள், கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளதா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார். அப்போது தாசில்தார் வெற்றிகுமார், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர்கள் எபினேசர், ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.