குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை
திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் கூறியிருப்பதாவது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி என 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி, நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேருராட்சிகளுக்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில்
3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 35 இன்ஸ்பெக்டர்கள், 70 சப்-இன்ஸ்பெக்டர்கள், 700 போலீசார், 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 17 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 30 ரோந்து வாகனங்கள் பாதுகாப்பு பணியில் உள்ளது. பதற்றமான 37 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.