தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-18 17:42 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள 275 வார்டுகளுக்கான உறுப்பி னர்களை தேர்ந்தெடுப்பதற்க்கான தேர்தல் இன்று (சனிக்கிழமை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
 இந்த தேர்தலில் வாக்களிக்க செல்பவர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கீழ்க்காணும் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்கு புத்தங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுனர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, இந்திய கடவுச்சீட்டு புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.  மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர் களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்