பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கலெக்டர் மசூதன்ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கலெக்டர் மசூதன்ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆய்வு
இன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு மையங் களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குபதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பதை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட தேர்தல் பார்வையார் தங்கவேல், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-
அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அவற்றுடன் படிவங்கள், எழுது பொருட்கள், மை மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான மருத்துவ உபகரணங்கள் என 80 வகை பொருட்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
100 சதவீதம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, சிவகங்கை ஆர்.டி.ஓ. முத்துகழுவன், சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.