முன்னேற்பாடு பணிகள்
மன்னார்குடி நகராட்சியில் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
மன்னார்குடி;
மன்னார்குடி நகராட்சியில் வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
மன்னார்குடி நகராட்சி தேர்தல் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 142 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 64 ஆயிரத்து 417 வாக்காளர்கள் வாக்களிக்க 62 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னுகிருஷ்ணன் தலைமையில் 240 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குபதிவுக்காக 67 மின்னனு வாக்கு பதிவு எந்திரங்களும் கூடுதலாக 14 வாக்கு எந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது.
தோ்தல் பார்வையாளர்
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 22-ந் தேதி எண்ணப்படுகிறது. இந்தநிலையில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை கொண்டுசெல்லும் பணி நேற்று நடைபெற்றது. வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதா? என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் நேற்று வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் கயல்விழி ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரும் மன்னார்குடி நகராட்சி ஆணையருமான சென்னுகிருஷ்ணன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.