வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபர் பிடிபட்டார்

சிவகங்கையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபர் தேர்தல் பறக்கும் படையிடம் பிடிபட்டார். அவரிடம் ரூ. 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-18 17:29 GMT
சிவகங்கை, 
சிவகங்கையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வாலிபர் தேர்தல் பறக்கும் படையிடம் பிடிபட்டார். அவரிடம் ரூ. 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புகார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுஉள்ளது இந்த நிலையில் சிவகங்கை 26-வது வார்டில் வாக்காளர் களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து பறக்கும் படை தாசில்தார் மைனாவதி சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் 26- வது வார்டு பகுதிக்கு சென்று திடீர் சோதனை செய்தனர். 
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் கையில் வாக்காளர்களின் பெயர்கள் எழுதப்பட்ட பட்டியலை வைத்துக் கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டு இருந்ததை பார்த்தனர். 
விசாரணை
இதை தொடர்ந்து அவரைப் பிடித்து விசாரித்தபோது அன்புச்செல்வன் (வயது35) என்பதும் அவர் அந்த வார்டில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது.
 இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் அவர் கையில் வைத்திருந்த வாக்காளர்களின் பெயர் பட்டியல் மற்றும் ரூ. 6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.அவர் மீது சிவகங்கையில் உள்ள நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்