தொப்பூர் கணவாயில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது இடிபாடுகளில் சிக்கி 2 டிரைவர்கள் காயம்

தொப்பூர் கணவாயில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-18 17:12 GMT
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி காங்கேயத்திற்கு வந்து கொண்டு இருந்தது. லாரியை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் சிவப்பிரகாசம் (வயது45) ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக முனுசாமி (36) உடன் வந்தார். 
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் முதல் வளைவை கடந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவித்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சை
இ்துகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். 
இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்