வேளாங்கண்ணி:
கீழையூர் போலீஸ் சரகம் ஈசனூர் பெட்ரோல் பங்க் எதிரில் வயலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.