300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

குன்னூர்-ஹில்குரோவ் இடையே 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

Update: 2022-02-18 16:45 GMT
ஊட்டி

குன்னூர்-ஹில்குரோவ் இடையே 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

சுத்தம் செய்யும் பணி

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வனப்பகுதிகள் வழியாக செல்லும் சாலைகள், தண்டவாளங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும் என்று தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து வனத்துறை மூலம் குன்னூரில் இருந்து ஹில்குரோவ் ரெயில் நிலையம் இடையே உள்ள தண்டவாளத்தில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி  நடந்தது. இந்த பணியில் வனத்துறையினர், ரெயில்வே ஊழியர்கள், தேசிய மாணவர் படை மாணவிகள் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். 

300 கிலோ கழிவுகள் அகற்றம்

அவர்கள் 2 குழுவாக பிரிந்து சுமார் 20 கி.மீ. தூரம் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவு பொருட்களை சேகரித்தனர். அவை மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டது. குன்னூர்-ஹில்குரோவ் இடையே 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு உள்ளது. 

வனவிலங்குகள் பிளாஸ்டிக் பொருட்கள் உண்பதால் உடலுக்கு தீங்கு ஏற்படுவதோடு, இறக்கும் அபாயம் உள்ளது. இதனால் மலை ரெயிலில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வெளியே வீசக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்