கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடக்கம்

கொள்ளிடம் பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

Update: 2022-02-18 16:43 GMT
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருக்கருக்காவூர், எடமணல், கடவாசல், வடகால், சீயாளம் கிராமத்தில் முதன்முதலாக இந்த ஆண்டுக்கான அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் பணியை கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், ஒன்றிய பொறியாளர் பிரதீஸ்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் திருச்செல்வம் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் தொடங்கி வைத்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியத்தில் அதிக எண்ணிக்கையில் அரசு கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மாஸ்மார்க்கிங் என்ற பெயரில் வீடு கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் வீடு கட்டி முடித்து தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசின் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு மத்திய-மாநில அரசின் பங்கு தொகையாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்து 40 வீதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கான்கிரீட் வீட்டுக்கும் 104 மூட்டை சிமெண்டு மற்றும் 120 கிலோ கம்பி வழங்கப்படுகிறது என்றனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்