விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-02-18 16:04 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே பூத்தமேடு கிராமத்தில் புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 16-ந் தேதி இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோவிலின் கதவுகளை பூட்டிவிட்டு அதன் பூசாரி, வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் காலை கோவிலை திறந்து பூஜைகள் செய்ய வந்தபோது முன்பக்க இரும்புக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த சில்வர் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பக்தர்களின் காணிக்கை பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுபற்றி, கோவில் நிர்வாகிகளுக்கும் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார், அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

 நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் சுமார் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்