தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

Update: 2022-02-18 15:42 GMT


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

பழுதான சாலை

பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் மெயின்ரோட்டில் ரெயில்வே பாலத்தையொட்டி சீனிவாசபுரம் உள்ளது. இங்கு உள்ள சாலை அடிக்கடி பழுது அடைவதால் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், வளர்ந்தாய மரம், மீனாட்சிபுரம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். அத்துடன் அங்கு அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.  
கருப்புசாமி, பொள்ளாச்சி.

விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை

பொள்ளாச்சி நகர பகுதியில் மகாலிங்கபுரம், கோட்டாம்பட்டி, வெங்கடேச காலனி உள்பட பல இடங்களில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படவில்லை. அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் அங்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வருவதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து விபத்ைத ஏற்படுத்தி வரும் வேகத்தடைகள் மீது வர்ணம் பூச வேண்டும்.
சந்திரசேகர், மகாலிங்கபுரம். 

கொசுக்கள் தொல்லை

கோவை மாநகராட்சி 5-வது வார்டு கரட்டு மேடு வி.கே.வி.நஞ்சப்பா நகரில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இங்கு கொசு மருந்து அடித்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் உள்ள கொசுக்களின் தொந்தரவை கட்டுப்படுத்த வேண்டும்.
பிரகாஷ், கரட்டுமேடு. 

குண்டும் குழியுமான சாலை

கோவை தடாகம் சாலையில் இருந்து முத்தண்ணன் குளக்கரை வழியாக செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரண மாக இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயத்துடன் உயிர் தப்பிசெல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
சுரேஷ், தெலுங்குபாளையம். 

சாலையில் ஆபத்தான குழி 

கோவை அரசு கலைக்கல்லூரி சாலையில் இருந்து திருச்சி சாலை செல்லும் சந்திப்பு பகுதியில் சாலையில் ஆபத்தான குழி உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் சாலையில் குழி இருப்பதால் அதற்குள் தவறி விழுந்து விபத்து ஏற்படுமு் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த குழியை சரிசெய்ய வேண்டும்.
ரவி, கோவை. 

தினத்தந்தி செய்தி எதிரொலி:
மின்விளக்குகள் சரிசெய்யப்பட்டது

கோவை பாலசுந்தரம் சாலையில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் உள்ளது. இதன் அருகே உள்ள சிறுவர் போக்குவரத்து பூங்கா நுழைவு வாயில் பகுதியில் இருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வரை 5 மின் கம்பங்களில் மின் விளக்குகள் ஒளிராமல் இருந்தன. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து இருந்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப் பட்டது. அதன் பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவற்றை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. 
முத்துலிங்கம், சித்தாபுதூர்.

வாகன ஓட்டிகள் சிரமம்

பொள்ளாச்சி ஜோதி நகரில் சாலை அமைக்க தோண்டப்பட்டு அதன் மீது ஜல்லி கற்கள் போடப்பட்டன. ஆனால் இதுவரை அங்கு பணிகள் தொடங்காததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இருசக்கர வாகனங்களில் செல்லும் சிலர் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த சாலை பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.
மணிகண்டன், பொள்ளாச்சி. 

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக தொற்றுேநாய் ஏற்படும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையோரத்தில் கொட்டப்பட்டு உள்ள குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். 
பாலகிருஷ்ணன், ஆனைமலை. 

ஆபத்தான பள்ளம்

கோவை கணபதி பஸ்நிறுத்தம் அருகே சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலயைின் நடுவே உள்ள ஆபத்தான பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.
நாராயணன், கணபதி. 

குப்பைகளால் தொல்லை

கோவை சாய்பாபகாலனி ஏ.கே.நகர் பகுதியில் சாலை ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது அந்த குப்பைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தினமும் தொல்லை கொடுத்து வரும் இந்த குப்பைகளை அதிகாரிகள் அகற்ற முன்வர வேண்டும். 
சந்தோஷ், ஏ.கே.நகர். 




மேலும் செய்திகள்