தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - அதிகாரி தகவல்

தேர்தல் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-02-18 15:41 GMT
காஞ்சீபுரம், 

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி ஆகியோரது உத்தரவின்படி சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி, சென்னை தொழிலாளர் இணை ஆணையர் வேல்முருகன் ஆகியோர்களின் அறிவுரைப்படி நாளை (சனிக்கிழமை) நடைபெறவிருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

இதற்காக அனைத்து வணிக நிறுவனங்கள், ஐ.டி., கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அந்தந்த பகுதிகளில் தேர்தல் நடைபெறும் நாளன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை தெரிவிக்க காஞ்சீபுரம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் (8778619552), காஞ்சீபுரம், தொழிலாளர் துணை

ஆய்வர் கமலா, (9952639441), காஞ்சீபுரம், தொழிலாளர் உதவி

ஆய்வர் மாலா (9790566759), காஞ்சீபுரம், முத்திரை ஆய்வர் .ஆனந்தன் (9952675234), பரங்கிமலை, தொழிலாளர் உதவி ஆய்வர் நவீன் கிருஷ்ணா (9840963838) போன்ற எண்களில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்