டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியது

Update: 2022-02-18 15:21 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் இன்று (சனிக்கிழமை) வரை தேர்தல் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 89 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி 89 கடைகள் மூடப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் ஊரக பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதனால் நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் ஊரகப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சென்று மது வாங்கி வருகின்றனர். நேற்று இரவு தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரம் பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குவதற்கு மதுபிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

மேலும் செய்திகள்