மது விற்ற வாலிபர் கைது
புன்னக்காயலில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்
ஆறுமுகனேரி:
புன்னக்காயல் நூறுவீடு பகுதியை சேர்ந்த சுடலைமாடசாமி மகன் சுடலைராஜ்(வயது27). இவர் அப்பகுதியில் மதுவிற்று வந்துள்ளார். அந்த பகுதியில் ரோந்து சென்று ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.