முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மண்டூர் மரணம்

முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.வி.மண்டூர் மரணம்

Update: 2022-02-17 21:32 GMT
பாகல்கோட்டை:

பாகல்கோட்டை தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு 1983-ம் ஆண்டு சுயேச்சையாகவும், 1985-ம் ஆண்டு ஜனதா கட்சி சார்பிலும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஜி.வி.மண்டூர். இந்த நிலையில் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஜி.வி.மண்டூர் பாகல்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை ஜி.வி.மண்டூர் உயிரிழந்தார். அவருக்கு வயது 93. இந்த நிலையில் நேற்று மாலை ஜி.வி.மண்டூரின் இறுதிசடங்கு கஜ்ஜிடோனி என்ற கிராமத்தில் நடந்தது. இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜி.வி.மண்டூரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்