வென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்தவாரி

வென்னிமலை முருகன் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது.

Update: 2022-02-17 21:07 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் காமராஜர்நகர் வென்னிமலை முருகன் கோவிலில் மாசித்திருவிழாவின் 11-ம் நாள் விழா பிராமணர் சமுதாயம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முருக பெருமான் கோவிலில் இருந்து சப்பரத்தில் எழுந்தருளி, கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு சென்றடைந்தார். அங்குள்ள மகாகணபதி கோவில் அருகில் சுவாமிக்கு அபிேஷகம், தீர்த்தவாரி, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் முருக பெருமான் அங்கிருந்து புறப்பட்டு வென்னிமலை கோவில் வந்தடைந்தார். அங்கு சுவாமிக்கு சண்முகர் அர்ச்சனை, பூஞ்சப்பர காட்சி, புஷ்பாஞ்சலி, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்