வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா; ரூ.44 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குளத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ.44 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-17 20:59 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் பேரூராட்சி 4-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக நேற்று ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நகர செயலாளர் திருமலை செல்வம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருமலை செல்வத்திடம் இருந்த ரூ.44 ஆயிரத்தை பறிமுதல் செய்து, அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்