வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா விற்ற வழக்கில் கைதான வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2022-02-17 20:28 GMT
நெல்லை:
பாப்பாக்குடி அருகே உள்ள ரெங்கசமுத்திரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 54). இவர் போக்சோ வழக்கில் அம்பை அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் மாயாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு, போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரைத்தார். அதனை கலெக்டர் ஏற்று மாயாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராதா, மாயாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
நெல்லை சந்திப்பு தெற்கு விளாகம் முத்துராமலிங்கத்தேவர் தெருவை சேர்ந்தவர் அய்யாத்துரை மகன் மாரிமுத்து (25). இவர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் பாளையங்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் மாரிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மாநகர கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன் ஆகியோர் போலீஸ் கமிஷனர் துரைக்குமாருக்கு பரிந்துரை செய்தனர். அதனை அவர் ஏற்று மாரிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் திருப்பதி, மாரிமுத்துவை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்