ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு

தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-02-17 20:27 GMT
மதுரை, 
தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல்
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (19-ந் தேதி) நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி, உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் என 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகளில் உள்ள 313 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் 1,702 பேர் பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.  அதற்கிடையில் தேர்தல் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த தேர்தல் வாக்குப்பதிவிற்காக 1,615 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  7 ஆயிரத்து 760 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். 
இவர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்து முடிந்தது. 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அப்போது எந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான குலுக்கல் நடத்தப்பட்டது. 
ஏற்பாடு
தேர்தல் பார்வையாளர் கமல் கிஷோர், கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த குலுக்கல்படி அவர்களுக்கு இன்று பிற்பகலில் எந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஆணை வழங்கப்படும். இந்த ஆணையை பெற்றுகொள்ளும் ஊழியர்கள் உடனடியாக அந்த வாக்குச் சாவடி மையத்திற்கு சென்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 
அதே போல் வாக்குச்சாவடிக்கு தேவையான வாக்குப்பதிவு உள்பட எந்திரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணிக்குமேல் அனுப்பி வைக்கப்படும்.

மேலும் செய்திகள்