ஆர்ப்பாட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-02-17 20:05 GMT
விருதுநகர்
விருதுநகரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு சூலக்கரையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 
இந்தநிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பள்ளியின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலந்தாய்வின்போது உபரி ஆசிரியர்களை நிர்ணயிக்க கடந்த 1.8.2021-ல் உள்ள மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது என்றும், அப்போது கொரோனா பாதிப்பு காலமாக இருந்ததால் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிக குறைவாக இருந்த நிலையில் 1.11.2021 அன்று தான் பள்ளிகள் திறக்கப்பட்டு அதன் பின்னர் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்