கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது;

Update: 2022-02-17 20:04 GMT
காரியாபட்டி
திருச்சுழி அருகே மாங்குளம் கிராம பகுதியில் எம்.ரெட்டியபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாங்குளம் மாரியம்மன் கோவில் கண்மாய்கரை முள் காட்டுப்பகுதியில் மீனாட்சி(வயது 34), தாடகை நாச்சியார்(32), சமுத்திரவள்ளி(32) ஆகியோர் 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருப்பதை கண்ட போலீசார் உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் மீனாட்சி, தாடகை நாச்சியார், சமுத்திரவள்ளி ஆகிய 3 பேர் மீதும் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்