இருசக்கர வாகனத்தில் சென்றவர் டிராக்டர் மோதி பலி

இருசக்கர வாகனத்தில் சென்றவர் டிராக்டர் மோதி பலி

Update: 2022-02-17 20:04 GMT
தளவாய்புரம்
தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் டிரைவர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் தனது இருசக்கர வாகனத்தில் தளவாய்புரம் மாஞ்சோலை காலனி பகுதியில் இருந்து அம்மையப்பபுரம் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் அந்த சாலையில் உள்ள ஒரு தனியார் அரிசி ஆலை மில் அருகில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே இதுபற்றி தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இவரது உடல் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் முத்துசாமிபுரம் மலைச்சாமி(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்