விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை
விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே ஆமணக்குநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி(வயது 39). பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் உள்ளனர். மாடசாமி கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாடசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை ராஜேந்திரன் பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.