விபத்தில் காயம் அடைந்த முதியவர் சாவு

பாளையங்கோட்டையில் விபத்தில் காயம் அடைந்த முதியவர் இறந்தார்.

Update: 2022-02-17 19:59 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை சிறு துணை நாயனார் தெருவை சேர்ந்தவர் சாம்ராஜ் (வயது 61). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே தாழையூத்து 9-வது பஸ் நிறுத்தம் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாம்ராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாம்ராஜ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்