கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் அமைக்கும் பணியை அதிகாரி ஆய்வு
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கன்டெய்னர் ஏற்றுமதி முனையும் அணைப்பதற்கான பணிகளை சென்னை மண்டல உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கன்டெய்னர் ஏற்றுமதி முனையும் அணைப்பதற்கான பணிகளை சென்னை மண்டல உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
கன்டெய்னர் ஏற்றுமதி முனையம்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ரெயில் நிலையத்தில் கன்டெய்னர் தொழில் முனையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு அமைக்கப்படவுள்ள கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் உள்ளிட்ட திட்ட பணிகளை சென்னை மண்டல உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
இதற்காக சென்னையிலிருந்து தனி ரெயில் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வந்தார். தொடர்ந்து கன்டெய்னர் ஏற்றுமதி முனையம் அமைப்பதற்கான பாதைகள் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
உதவி கோட்ட மேலாளர் ஆய்வு
இதனையடுத்து உதவி கோட்ட மேலாளர் சுப்பிரமணியன் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் ஆய்வு செய்து ரெயில் நிலையத்தில் அனைத்து வசதிகளும் உள்ளதா என்றும், ரெயில் நிலையம் தூய்மையாக பராமரிக்க படுகிறதா என்பது குறித்தும், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரெயில்வே அதிகாரிகள் உடனிருந்தனர்.