மின்சார ரெயில் மோதி மூதாட்டி பலி

மின்சார ரெயில் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-02-17 19:22 GMT
புதுக்கோட்டை, 
சோதனை ஓட்டத்தில் மின்சார ரெயில் மோதி மூதாட்டி பலியானார்.
திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாலை 3.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து மீண்டும் புறப்பட்டு திருச்சி நோக்கி 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது கீரனூர் அருகே இளையாவயல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்ற கோவில்காடு பூசாரி சுருட்டையன் என்பவர் மனைவி செல்லம்மாள் (வயது 71) மீது ரெயில் மோதியது. 
இதில், பலத்த காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மூதாட்டி செல்லம்மாளுக்கு காது கேட்காது என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் ரெயில் நிலையத்தில் மின்சார கம்பியில் அடிபட்டு குரங்கு ஒன்றும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்