108 திருவிளக்கு பூஜை

உலக அமைதி வேண்டி சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update: 2022-02-17 19:18 GMT
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் தொற்றில் இருந்து அனைவரும் விடுபட வேண்டியும், அனைத்து தோஷங்களில் இருந்து விடுபடவும் 108 விளக்கு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விளக்கு பூஜையை குன்னம் தவமணிகுருக்கள் நடத்தி வைத்தார். விழாவில் 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்