திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் முதியவர் தற்கொலை

களம்பூர் அருகே திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-17 19:03 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை அடுத்த மேல் அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). இவரது தம்பி மகன் திருமணம் கடந்த 14-ந்தேதி நடந்தது. 

திருமண பத்திரிகையில் தனது பெயர் போடாததால் விரக்தி அடைந்த சுப்பிரமணி 15-ந்தேதி வீட்டில் தூக்கில் தொங்கினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக ஆரணிக்கு கொண்டு சென்றனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்