ஷேர் ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி சாவு

நாய் குறுக்கே வந்ததால் கார் மீது மோதிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி இறந்தார்.;

Update: 2022-02-17 18:37 GMT
திருப்புவனம்,

நாய் குறுக்கே வந்ததால் கார் மீது மோதிய ஷேர் ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி இறந்தார்.

நாய் குறுக்கே பாய்ந்தது

திருப்புவனம் அருகே பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது செம்பூர் காலனி. இந்த பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்டிற்கு மருந்து வாங்குவதற்காக திருப்புவனத்திற்கு ஷேர்ஆட்டோவில் வந்துள்ளார். ஆட்டோவை மேலபூவந்தியை சேர்ந்த அருண் (22) என்பவர் ஓட்டி வந்துள்ளார். சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஷேர் ஆட்டோவிற்கு முன்பு கார் சென்றுள்ளது. அப்போது  நாய் குறுக்கே வந்ததால் கார் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். அப்போது காரின் பின்புறம் மோதி ஷேர் ஆட்டோ கவிழ்ந்துள்ளது. 

பரிதாப சாவு

இதில் ஷேர் ஆட்டோவில் வந்த பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை பூவந்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் அழகுராஜா, பூவந்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன், ஷேர் ஆட்டோ டிரைவர் அருண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்