திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றன.;

Update: 2022-02-17 18:33 GMT
திருப்பத்தூர்,

திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் தெப்ப திருவிழா நடைபெற்றது. சவுமியநாராயணபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினர். காலையில் பகல் தெப்பமும், இரவில் ெதப்பமும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று தீர்த்தவாரி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியார், மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்