விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் வீடு கட்டும் பணி
விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் வீடு கட்டும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் விளந்திடசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தெருவில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் (அவாஸ் பிளஸ்) ரூ.2 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில், 269 சதுர அடி அளவில் புதிய வீடுகள் கட்டுவதற்கான தொடக்கப்பணி நடைபெற்றது. இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஒன்றிய பொறியாளர் சிவக்குமார், பணி மேற்பார்வையாளர் மோகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சங்கீதா, ஊராட்சி செயலர் தியாகராஜன், வார்டு உறுப்பினர் பிரேமாவதி உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல் ஊராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் வீடு கட்டுவதற்கான பணியினை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.