துடியலூர் அருகே தூங்கும்போது தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்

துடியலூர் அருகே தூங்கும்போது தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-17 18:15 GMT

துடியலூர்

துடியலூர் அருகே தூங்கும்போது தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

மது அருந்தினர்

கோவை துடியலூர் அருகே வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் வீதியில் வசிப்பவர் சிவகுமார் (வயது24).கூலி தொழிலாளி. இவர் தனது தாயாருடன் வசித்து வந்தார். 

அதே பகுதியை சேர்ந்தவர் உறவினர் கோபி நாத் (29). இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, வடமதுரை தனியார் மண்டபம் முன்பு உள்ள காலி இடத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தனர். 

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவக்குமார், கோபிநாத்தின் தாயாரை பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. 

பின்னர் அவர்கள் அங்கிருந்து பிரிந்து விட்டனர். ஆனால் தனது தயாரை பற்றி சிவகுமார் பேசியதை கோபிநாத் மனதில் வைத்துக்கொண்டு கோபத்துடன் இருந்துள்ளார்.

கொலை

இந்த நிலையில் நேற்று இரவு சிவகுமார் வீட்டுக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் கோபிநாத் அங்கு சென்றுள்ளார்.
 

பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்த சிவகுமாரை  இடது மார்பு பகுதி மற்றும் முதுகு பகுதியில் கத்தியால் குத்தி உள்ளார்.  

இதில்சிவகுமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். 

இதுகுறித்து  துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்