மாடு முட்டி 10 பேர் காயம்

கல்லலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-02-17 18:14 GMT
காரைக்குடி, 

காரைக்குடி அருகே கல்லலில் மாசி மக விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முதலில் நூற்றுக்கணக்கான கட்டுமாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இதை அங்கிருந்த இளைஞர்கள் அடக்க முயன்றனர். இதில்  சில காளைகள் வீரர்களிடம் பிடிப்பட்டன. பல காளைகள் அவர்களிடம் இருந்து தப்பிச் சென்றன.
அதன் பின்னர் மதியம் தொழுவத்தில் இருந்து மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன. இதை அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் பிடிபட்டது. சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடி கொடுக்காமல் சென்றது. காளைகள் முட்டியதில் 10 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதையொட்டி தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்