சோழசிராமணி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

சோழசிராமணி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Update: 2022-02-17 18:06 GMT
பரமத்திவேலூர்:
சோழசிராமணி அருகே உள்ள வெய்யக்காஞ்சாம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 75). விவசாயி. இவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் அவர் குணமடையவில்லை என்று ெதரிகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பழனியப்பன் விஷம் குடித்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பழனியப்பன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்